இந்தியா மற்றும் இங்கிலாந்து 19 வயத்துக்குட்பட்டோருக்கான இறுதிப்போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே மைதானத்தில் இன்று (பிப்.06) நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்சி அதிரடியாக ஆடி சதம் எடுத்துள்ளார். அவர் 57 பந்துகளில் 104 ரன்கள் (9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) எடுத்துள்ளார். இந்தியா 20.2 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.