அமெரிக்காவை திணறடித்த சூர்யகுமார் யாதவ்: 84 ரன்கள் குவிப்பு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்று (பிப்., 07) அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 20 ரன்களிலும், திலக் வர்மா 25 ரன்களிலும் வெளியேறினர்.

தொடர்புடைய செய்தி