உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் இன்று (நவ. 24) பதவியேற்கிறார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் ஓய்வுபெற்றார். இவரைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேகிறார். அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம், பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கு உள்ளிட்ட பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் நீதிபதி சூர்ய காந்த் அங்கம் வகித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி