ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், தனது 45-வது திரைப்படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து அதன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "இசையமைக்கும் பணிகள் அருமையாக போய்க்கொண்டிருக்கிறது. சூர்யா சாரை சின்ன வயதிலிருந்தே பார்த்து கொண்டிருக்கிறேன். இது ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.