கோவை மாவட்ட காவல்துறை குற்ற சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் வேன் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததை அடுத்து, மலைப்பாதையில் உள்ள 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்தபடியே போலீசார் இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள 1,500 கேமராக்களும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள நவீன கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.