சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று (ஜூன் 04) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஓசூர் அடுத்த சூளகிரி, வேலூர் வேலப்பாடி, திருப்பத்தூர் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன. குறிப்பாக சூளகிரி அலுவலகத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்தது. சார்பதிவாளர்கள் ஆவண பதிவுக்கு லஞ்சம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த திடீர் சோதனைகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி