நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான படம் ‘கருப்பு’. இந்த படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நெல்லையில் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விஜய் அரசியலுக்கு சென்றதால் சினிமாவில் வெற்றிடம் இல்லை. சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் விஜய் வெற்றிடத்தை நிரப்புவார்கள். கருப்பு திரைப்படத்தின் Part-2 கண்டிப்பாக வரும். அரசியலை மையப்படுத்திய பகுதிகளும் அதில் இருக்கும்” என்றார்.
நன்றி: பாலிமர்