ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நஸ்ரியா மற்றும் நஸ்லென் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'சீன்' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்.25-ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. துபாயில் உள்ள சிலிகான் சென்ட்ரல் மாலில் மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக நவ.6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.