RJ பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள 'கருப்பு' திரைப்படம், உலக அளவில் ரூ.147 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யாவின் மிரட்டலான நடிப்பும், ஆர்.ஜே.பாலாஜியின் திரைக்கதையும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்ததே இந்த இமாலய வெற்றிக்கு காரணம் என திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.