'ரெட்ரோ' படத்தையடுத்து சூர்யா, ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். 'சூர்யா 45' என அழைக்கப்படும் இப்படத்தில் த்ரிஷா, சுவாசிகா, யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் டைட்டில் டீசர் வரும் ஜூன் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு இன்று (ஜூன் 18) போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.