நடிகர் ஷைன் டாமை சந்தித்து ஆறுதல் தெரிவித்த சுரேஷ் கோபி

நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் அவரது தாயார் மரியா கார்மலும் கேரளாவின் திருச்சூர் சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தமிழ்நாட்டின் தர்மபுரியில் நேற்று நடந்த கார் விபத்தில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்தார். இந்த நிலையில், தர்மபுரியில் சிகிச்சை பெற்ற பின் திருச்சூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே மருத்துவமனைக்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி