இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த சூரத் நீதிமன்றம்

பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்புக்கு எதிராக சூரத் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. பிராமண சமூகத்தினர் குறித்து சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை டிசம்பர் 24ம் தேதி நடைபெற உள்ளது. அனுராக் காஷ்யப், தமிழில் இமைக்கா நொடிகள், லியோ, மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕