வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இந்த தீர்ப்பு அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி. மாநில அரசின் உரிமைக்காக திமுக போராடும், வெல்லும் என தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிவைத்த மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, 10 மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக முதல்வர் சட்டப்பேரவை உரையில் தெரிவித்துள்ளார்.