தவறாக பயன்படுத்தப்படும் போக்சோ.. உச்ச நீதிமன்றம் கவலை

காதலித்து விருப்பத்துடன் ஓடிப் போகும் இளம் வயதினரை அரசு எப்படித் தடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், போக்சோ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்துக் கவலை தெரிவித்துள்ளது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வு, "15-18 வயது வரையிலான பருவத்தில் ஏற்படும் ஒவ்வொரு உறவையும் போக்சோவாகக் கருத முடியுமா? குடும்ப கௌரவத்தைக் காக்கப் பெற்றோர் வழக்குப் போடுவது வழக்கமாகிவிட்டது" எனக் கூறி விசாரணையை ஜூலை 17க்கு ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்தி