ஆதவ் அர்ஜுனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக திமுக வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார். இதே விவகாரத்தில் தவெகவினர் கருத்து தெரிவிக்க தடை கோரி திமுக தொடர்ந்த இடையீட்டு மனுவை, திமுக தரப்பு இன்று (ஜூலை 7) திரும்ப பெற்றதை அடுத்து நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்தது. அமைச்சர்களின் கருத்துகளால் வழக்கின் விசாரணையில் தாக்கம் ஏற்படும் என திமுக வாதாடிய நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.