கொடைக்கானலில் தமிழ் திரைப்பட துணை நடிகையின் தந்தை கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பங்ளாவில் துணை நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தையை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பங்களா அறையில் சேரில் கட்டிப் போட்டவாறு, உடல் முழுவதும் டேப் சுற்றப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். விஷ்ணுபிரியா சூர்யாவின் 'மாயாவி' படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.