தவெக விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில், “தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்க முடியாது. விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுப்போம். சக தோழமை கட்சியான கம்யூனிஸ்டு கட்சிகளின் முடிவைப் பார்த்த பிறகு நாங்கள் முடிவு எடுப்போம். குடியரசுத் தலைவர் ஆட்சியோ, மறு தேர்தல் வருவதோ தேவையில்லாதது; அது ஏற்புடையதும் அல்ல” என தெரிவித்துள்ளார்.
நன்றி: தந்தி