சென்னை ராயப்பேட்டையில், மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் சிறப்பு பொதுக்குழு இன்று (பிப்.15) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2026 தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற பாடுபடுவோம் எனவும் தேர்தலில் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவில் மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில், மமகவும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
நன்றி: சன்நியூஸ்