திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில், தொண்டர்களுக்கு மது பாட்டில்கள் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தை கிராமத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஆண்களுக்கு மது பாட்டில் சப்ளை செய்யப்பட்டுள்ளன. பொதுவாகவே அதிமுக, திமுக கூட்டங்களில் குவாட்டரும், கோழி பிரியாணியும் வழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.
நன்றி: NewsTamilTV24x7