மாதவிடாய் கால வயிற்று வலி மற்றும் மன உளைச்சலை போக்க வாழை, பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். வாழைப்பழத்திலுள்ள மெக்னீசியம் வலியை குறைக்கவும், பப்பாளியின் வைட்டமின் A ஹார்மோன் சமநிலையை பேணவும், ஆப்பிளின் இரும்புச்சத்து சோர்வை நீக்கவும் உதவுகின்றன. உடலையும் மனதையும் சீராக வைத்திருக்க இந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது என மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.