நீட்-சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண்ணை 50%-லிருந்து 30%-ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டு சுற்று கலந்தாய்வு முடிந்தும் 1,857 இடங்கள் காலியாக உள்ள நிலையில், பயிற்சி பெற்ற மருத்துவர்களை வீணடிக்காமல் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.