கோடை விடுமுறை நீட்டிப்பு? மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்

கோடை விடுமுறை நீட்டிப்பு தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை அந்தமான் பகுதிகளில் நாளை தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் பெரியளவில் இல்லாத காரணத்தால் கோடை விடுமுறை நீட்டிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி