தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கோடை மழை (வீடியோ)

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்னிந்திய பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, இன்று (ஏப்.05) 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி