கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்யப்பட்டுள்ளதாக கோவை ஐஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், சிறுமியின் குடும்பத்திற்குப் பரிச்சயமான கார்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கார்த்தி ஆசை வார்த்தை கூறி சிறுமியைக் கடத்தி இக்குற்றத்தைச் செய்துள்ளார் என்றும், கைதான இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நன்றி: பாலிமர்