பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா பகுதியில் பயணிகள் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொடூர சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: Dinamani