"சர்க்கரை விலை உயர்வுக்கும் எத்தனாலுக்கும் தொடர்பு இல்லை".. மத்திய அரசு விளக்கம்

"சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்காக கரும்பு திருப்பி விடப்படுவதே காரணம் எனக் கூறுவது தவறு" என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை பயன்படுத்தப்படும் அளவு 2022-23-ம் ஆண்டில் 12 சதவீதமாக இருந்த நிலையில், 2025-26-ல் சுமார் 9 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், "நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலில் சுமார் 75 சதவீதம் தற்போது மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது” என விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕