1983-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவை, தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இது குறித்துப் பதிவிட்டுள்ள சுதீஷ், "என் வாழ்வின் முதல் ஹீரோவான கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி; என்றென்றும் அவரது ரசிகனாக இருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.