கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு தவெக தலைவர் விஜய் தான் முழு காரணம் என்று கடந்த செப்டம்பரில் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆவேசமாக பேசியிருந்தார். தொடர்ந்து விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். இந்த நிலையில், விஜய்யிடம் மன்னிப்பு கோருவதாக வீடியோ ஒன்றை இன்று (நவ.. 13) வெளியிட்டுள்ளார். அதில், 'விஜய் அண்ணா என்னை மன்னிக்கவும், உங்களை தனிப்பட்ட முறையில் ஒருமையில் பேசிவிட்டேன். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
நன்றி: தந்தி