திடீர் மாரடைப்பு: பஸ் மீது கார் மோதி தம்பதி பரிதாப பலி

திருவள்ளூர் அருகே காரில் சென்றபோது ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், கார் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற ரவிச்சந்திரன் (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி கீதா (56) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரில் இருந்த பேத்திகள் காயமின்றி தப்பினர். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி