சட்டென போட்ட பிரேக்.. பறந்து விழுந்த கைக்குழந்தை.. ஷாக் வீடியோ

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பேருந்து திடீரென பிரேக் போட்டதால், குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது, ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால், பெண்ணின் கையில் இருந்த ஒரு வயது குழந்தை, தவறி சாலையில் விழுந்தது. மற்றொரு குழந்தையுடன் அவரது கணவர் கீழே விழுந்தார். இதில், கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி