அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இல்லத்தில் எஸ்பி வேலுமணி தரப்பினர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். வேலுமணி தரப்பைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கட்சிக்குள் தங்கள் தரப்பு வலிமை குறைந்து வருவதால், எஞ்சிய எம்.எல்.ஏ-க்களைத் தக்க வைப்பது மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்