மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் கிளினிக்குகள் தொடங்கப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. அதில், ஒவ்வொரு நடமாடும் கிளினிக்கிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு பிஸியோதெரபிஸ்ட் இருப்பார்கள். தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் இவர்கள் நேரில் சென்று இலவச உடல் பரிசோதனை செய்வார்கள். நாள்பட்ட வியாதிகளுக்கு மருந்துகள் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.