வெற்றி விவசாயி உரிமைத் தொகை.. ஆண்டுக்கு ரூ.15,000

சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும் விதைப்புக் கால நிதியுதவியாக ஆண்டுக்கு ரூ.15,000 இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில், விரைவில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உரிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.6,000 மூன்று தவணைகளில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி