“அரசு மருத்துவமனைகளின் அடுத்தடுத்து அலட்சியப்போக்கும், தவறான மருத்துவமும் தொடர்வது பெரும் கவலை அளிக்கிறது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் அவரது அறிக்கையில், “அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப் பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்க்கிறது. அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கு தொடர்வதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.