சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் புதிதாக வாங்கப்படும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கு 50 சதவிகித மானியம் (ரூ.75,000 வரையில்) வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அதில், தற்போது இருக்கும் ஆட்டோக்களை சிஎன்ஜி (கேஸ்) முறைக்கு மாற்றுவதற்கு 50 சதவிகித மானியம் (ரூ.30,000 வரையில்) வழங்கப்படும் என கூறியிருந்தது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக ராஜீவ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.