மானிய உர மோசடி: அரசுக்கு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

விவசாயிகளுக்கான மானிய உரங்களை மாற்றுப் பயன்பாட்டிற்குத் திசைதிருப்பி மோசடி செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வலியுறுத்தியுள்ளார். கரூரில் 837 யூரியா மூட்டைகள் பிடிபட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், போலி நிறுவனங்கள் மூலம் தொடரும் முறைகேடுகளைத் தடுக்கப் பறக்கும் படைகள் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். மோசடிக் கடைகளை நிரந்தரமாக மூடவும் உயர்மட்டக் குழு அமைத்து மாநில அளவில் ஆய்வு செய்யவும் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕