பழனியில் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உயர் நீதிமன்ற கிளை நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அவர் வரும் ஜூலை 27 முதல் ஆக.3-ம் தேதி வரை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:News18