நீட் தேர்வு தொடர்பான மாணவர்களின் கவலைகளைத் தீர்க்க அரசு முழு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக கூறிய அவர், மாணவர்கள் அரசியல் பகடைக்காய்கள் அல்ல என்றும், அவர்களுக்கு குழப்பத்திற்கு பதிலாக தெளிவும், முழக்கங்களுக்கு பதிலாக தீர்வும் தேவை என்றும் தெரிவித்தார். மாணவர்களுக்கு தேவையான பதில்களையும், சீர்திருத்தங்களையும் வழங்குவது அரசின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.