நடிகைக்கு போன் செய்த நபர்.. செல்போனை உடைத்த தந்தை

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான பூஜிதா பொன்னாடா, தனது பள்ளி வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத விஷயம் குறித்து மனம் பகிர்ந்தார். அவர் கூறியதாவது, "நான் 11-ம் வகுப்பு படிக்கும்போது, என்னுடன் படிக்கும் பையன் என் செல்போன் நம்பரை கண்டுபிடித்து எனக்கு போன் செய்து பேசினான். இதை நான் என் தந்தையிடம் சொல்ல, அவர் என் செல்போனை ஆத்திரத்தில் தூக்கிப்போட்டு உடைத்துவிட்டார். நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவே இல்லை. உண்மையை சொன்னது குற்றமா? என்று வேதனைப்பட்டேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி