தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ள 'நான் முதல்வன் திட்டத்தின்' மூலம் பல லட்சம் மாணவர்கள் தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், திருவாரூரை சேர்ந்த ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் படிக்கும் மாணவன் ரோஷன், 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பயின்று, JEE தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் 75% மதிப்பெண்கள் பெற்று, தற்போது திருச்சியில் உள்ள NIT-இல் படிக்க தேர்வாகியுள்ளார்.