தூண்களுக்கு இடையில் சிக்கிய மாணவியின் தலை.. ஷாக் வீடியோ

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவி ஒருவர் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இரண்டு தூண்களுக்கு இடையே இருந்த சிறிய ஓட்டைக்குள் மாணவியின் தலை சிக்கிக்கொண்டது. இதனால், அவர் அலறி துடித்த நிலையில் பள்ளி ஆசிரியர்கள் ஓடிச் சென்று உதவ முயன்றனர். மேலும், இதுகுறித்து அறிந்த கிராம மக்களும் பள்ளிக்குச் சென்று தூண்களை சிறு சிறு துண்டுகளாக அகற்றி சிறுமியின் தலையை பத்திரமாக வெளியே எடுத்தனர்.

நன்றி: TeluguScribe

தொடர்புடைய செய்தி