திருச்சி அரசு மருத்துவமனையில் மாணவி உயிரிழப்பு.. தினகரன் கண்டனம்

திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலியர் மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “மூக்கு அறுவை சிகிச்சையின் போது அதிக மயக்க மருந்து கொடுக்கப்பட்டதே மாணவியின் உயிரிழப்புக்குக் காரணம் என சக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி, மருத்துவர்களின் அலட்சியம் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி