அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் மனநலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 5,000 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உளவியல் முதலுதவிப் பயிற்சி வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. மாணவர்களிடையே மன அழுத்தத்தை குறைக்கவும் நினைவாற்றலை அதிகரிக்கவும் மகிழ்ச்சிப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த கல்வியாண்டிலேயே இதற்கான செயல்முறைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.