திருநெல்வேலி மாவட்டம் இட்டமொழி அருகே வடலிவிளையில் புற்றுநோய் பாதிப்பால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த அய்யாதுரை என்ற நபர் இன்று (மார்ச். 11) அதிகாலையில் திடீரென உயிரிழந்தார். அவரின் மகளான மதுமிதா தந்தை இறந்த சோகத்திலும் கனத்த இதயத்துடன் அவரின் உடலை வணங்கிவிட்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத பள்ளிக்கூடம் கிளம்பி சென்றார். இது தொடர்பான மனதை உருக வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.