நீட் தேர்வில் தோல்வி.. மாணவர் பரிதாப மரணம்

மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், உத்தரப்பிரதேசத்தின் ராவத்பூரைச் சேர்ந்த முகமது ஆன் (21) என்ற மாணவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், 'அம்மா அப்பா என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன்' என்று எழுதியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி