சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நேற்று (செப்.18) உயிரிழந்த நிலையில், ‘அவரது மரணம் டெங்கு பாதிப்பால் ஏற்படவில்லை’ என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. மாணவர் ‘ஸ்க்ரப் டைபஸ்’ (Scrub Typhus) எனப்படும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் மேலும் யாருக்காவது இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நன்றி: சன்நியூஸ்