விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவன் பலி

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள DVS குடியிருப்புப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர் கோட்ரேஷ்(16) பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், மாணவனின் தந்தை, எனது மகனை விடுதி வார்டன்கள் துன்புறுத்தியதாக முன்பே புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி