தமிழக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் மாணவர் தற்கொலை

சிவகங்கை: செம்பனூர் கிராமத்தை சேர்ந்த ராகுல் தர்ஷன் (18) நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில் அதன் முடிவுகள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் தனது உறவினரான முன்னாள் எம்.எல்.ஏ. சிவசாமி வீட்டில் ராகுல் தங்கியிருந்தார். அப்போது மாடியில் உள்ள அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நீட் தேர்வால் ராகுல் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா? என விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி