வீட்டு வேலை செய்யாத மாணவி.. தந்தை கண்டித்ததால் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் சென்னயம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகள் கார்த்திபிரியா (20). இவர் கல்லூரி முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்த நிலையில், வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் அவரது தந்தை முத்துச்சாமி, கார்த்திபிரியாவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, விஷம் குடித்து மயங்கியுள்ளார். உடனே அவரை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த மாணவி, நேற்றிரவு (ஜூன் 5) உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி