தமிழகத்தில் மாணவர் சேர்க்கை: 2.34 லட்சம் பதிவு

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு நேற்று வரை 2.34 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதில் 1.60 லட்சம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்; 1.19 லட்சம் பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றியுள்ளனர். விண்ணப்பிக்க ஜூன் 2 வரையும், சான்றிதழ் பதிவேற்ற ஜூன் 6 வரையும் அவகாசம் உள்ளது. ஜூன் 5-ல் ரேண்டம் எண், ஜூன் 8-20 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து, ஜூன் 29-ல் தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.

தொடர்புடைய செய்தி